சந்திரயான்-3 : கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து
சந்திரயான்-3 திட்ட சாதனை தொடர்பாக கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை மற்றும் அமெரிக்க பிரபலங்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் விண்வெளி திட்டங்களை கேலிச்சித்திரங்கள் மூலம் கேலி செய்து வந்த அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகளும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.
அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 வரலாற்று சிறப்புமிக்க தரையிறக்கம் நிகழ்த்தியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள். திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்களுக்கு இது நம்ப முடியாத சாதனை. இத்திட்டத்தில் உங்களுடன் கூட்டாளியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.
Comments are closed.