இலங்கை
ஹோட்டலுக்குள் நபர் செய்த மோசமான செயல்
ஹோட்டலுக்குள் நபர் செய்த மோசமான செயல்
குளியாபிட்டியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றிரவு 9.45 அளவில் – ஹெட்டிபொல வீதியில் குருடுகும்புர சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில், குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூனமல்தெனிய – அக்கரவத்தை பகுதியைச் சேர்ந்த “கொண்டயா” என அழைக்கப்படும் சந்தன செனரத் ஜயக்கொடி என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர் ஹெட்டிபொல – வஸ்வத்த பிரதேசத்தில் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகின்றார். அவர் பலருடன் தகாத உறவுகளை வைத்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.