tamilni 329 scaled
இலங்கைசெய்திகள்

குருந்தூர்மலை சர்ச்சையின் பின்னணியில் இந்தியாவின் முக்கிய கட்சி

Share

குருந்தூர்மலை சர்ச்சையின் பின்னணியில் இந்தியாவின் முக்கிய கட்சி

முல்லைத்தீவு, குருந்தூர்மலை சர்ச்சையில் இந்தியாவின் இந்துத்துவ அமைப்பான பாரதிய ஜனதா கட்சியின் தாக்கம் அல்லது பின்னணி உண்டா என அமெரிக்கத் தூதுவர் தமிழ்ப் பிரதிநிதிகளிடம் வினாவினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(24.08.2023) தமிழ்ப் பிரதிநிதிகளை சந்தித்தபோதே குறித்த விடயம் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் நேற்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரையும் யாழில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அமெரிக்கத் தூதுவரின் சந்தேகம்
யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார்.

இதன்போதே அமெரிக்கத் தூதுவர் மேற்படி சந்தேகத்தை வினாவியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த சி.வி.கே. சிவஞானம், “அப்படி ஒரு பின்னணியும் கிடையாது. இது அரசின் – ஆளும் தரப்பின் ஒரு வஞ்சகச் செயற்பாட்டுக்கு எதிராக இயல்பாகக் கிளர்ந்த தமிழ் மக்களின் மன எண்ணம்” என தெளிவுபடுத்தினார்.

இதேநேரம் குருந்தூர்மலை விடயத்தையொட்டி, நாடாளுமன்றச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி சரத் வீரசேகர நாடாளுமன்றில் ஆற்றிய உரை சுட்டிக்காட்டப்பட்டது.

இதனை வெளியில் அவரால் பகிரங்கமாகக் கூற முடியுமா? வெளியில் கூறினால் ரஞ்சன் ராமநாயக்க போன்று அவரும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும் என்ற விடயமும் அமெரிக்கத் தூதுவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...