சிங்கள இளைஞனை திருமணம் செய்யும் தமிழ் தேசிய அரசியல் பிரமுகரின் புதல்வி!
நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சராக பதவி விகித்தபோது அவருக்கு எதிராக இலங்கை தமிழ் அரசுக்கட்சி பிரச்சார போரில் ஈடுபட்ட போது, அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று சிங்கள சம்மந்தி.
க .வி விக்னேஸ்வரனுக்கு எதிரான தமிழ் அரசு கட்சியின் போர் என வர்ணிக்கப்பட்டது. விக்னேஸ்வரனுக்கு எதிரான சுமந்திரன் அணியின் போரே.
விக்னேஸ்வரனை சிங்கள சம்மந்தி என தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் யாரும் தாக்கியதாக தெரியவில்லை. ஆனால் அந்த தலைவர்களின் தொண்டர்கள் அதையே பிரதான ஆயுதமாக பாவித்தார்கள். தலைவர்களும் அதை தடுக்கவும் இல்லை, கண்டுகொள்ளவில்லை.
நாட்டிலுள்ள இன்றைய இளைய தலைமுறையினர் அதிலும் குறிப்பாக, கொழும்பில் பிறந்து வளர்ந்த தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடாற்ற தலைமுறையினர் இனம் கடந்து திருமணம் செய்வது சாதாரண விடயம், அதை புரிந்து கொள்ளவும் முடியும்.
தீவிர தமிழ் அரசியலில் பங்கேற்ற இனத்துவ அரசியலை வாழ்க்கையாக கொண்டவர்கள் போராட்ட இயக்க பின்னணியுடையவர்களின் பிள்ளைகள் அனேகர் இப்படியிருப்பதில்லை என்பது உண்மையாயினும், முதலாவது வகையினரின் மாற்றத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகவியலில் அந்த மாற்றமும் ஏற்படிக்கூடியதே.
என்றாலும், பின்னர் விக்னேஸ்வரனின் மீதான அந்த குற்றச்சாட்டை தமிழ் அரசு கட்சியினர் கைவிட்டனர். கைவிட்டனர் என்றும் குறிப்பிட முடியாது. அந்த ஆயுதத்தை தாக்க பயன்படுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டனர். காரணம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிழல் தலைவர் எம்.ஏ.சுமந்திரனின் புதல்வர் காதல் மணம் புரிந்தார். அவர் மணமுடித்தது ஒரு சிங்கள் பெண்ணை.
இப்பொழுது விக்னேஸ்வரன் மீது சிங்கள சம்மந்தி விமர்சனம் பெரும்பாலும் வைக்கப்படுவதில்லை, காரணம் முன்னர் அவர் மட்டும்தான் கூண்டில் ஏற்றப்பட்டார். இப்பொழுது அவர் மட்டும் தனித்து இல்லை.
எனினும் தற்போது நாம் சொல்ல வந்த விடயம் அதுவல்ல.
தமிழ் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அரசியல் பிரமுகர் ஒருவரின் மகளுக்கு விரைவில் சிங்கள இளைஞனுடன் திருமணம் நடைபெறவுள்ளது.
அந்த பிரமுகர் யார் என நாம் கூறப்போவதில்லை. திருமணம் தொடர்பாக இரண்டு தகவல்களை மாதிரம் குறிப்பிட முடியும்.
குறித்த திருமணமாந்து அடுத்த வாரம் நடைபெறுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
மணமகளின் தந்தை தமிழ் தேசிய அரசியல் பரப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவந்துள்ளது,
1 Comment