வெளிநாடொன்றுக்கு தப்பிக்க முயன்ற 32 பேருக்கு நேர்ந்த நிலை!
அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச்செல்ல முயன்ற நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு கடல்வழியாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றபோது 55 பேர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு 07-08-2023 எடுத்துக் கொள்ளப்பட்ட போது 32 பேர் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.
அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட அதனடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 10 மாத கால சாதாரண சிறை தண்டனை என்ற அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுதுரை உத்தரவிட்டார்.
தண்ட பணத்தை அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனையில் விதிக்கப்பட்டது.
Leave a comment