இலங்கை
யாழில் அகழ்வின் மூலம் லக்சுமி நாணயங்கள்!
யாழில் அகழ்வின் மூலம் லக்சுமி நாணயங்கள்!
யாழ்ப்பாணம் – கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது லக்சுமி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினர், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து கடந்த ஒரு மாத காலப் பகுதியாக கந்தரோடை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அகழ்வாராய்ச்சியின் போது கி.பி. 1ஆம் – கி.பி. 3ஆம் நூற்றாண்டு கால பகுதிக்கு இடைப்பட்டதாக கருதப்படும் லக்சுமி நாணயங்கள் 05 மீட்கப்பட்டுள்ளன.
1917ஆம் ஆண்டளவில் கந்தரோடை பகுதிக்கு களப் பயணம் மேற்கொண்ட “போல் பீரிஸ்” நாணயங்கள் சிலவற்றை கண்டு பிடித்த போது , அவற்றில் பெண்ணொருவர் தாமரை மலர் மீது நிற்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டதை ஆதாரமாக காட்டி , அவருக்கு லக்சுமி நாணயம் என பெயர் வைத்தார்.
You must be logged in to post a comment Login