பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கு நீச்சல் போட்டி
இலங்கைசெய்திகள்

பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கு நீச்சல் போட்டி

Share

பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கு நீச்சல் போட்டி

திருகோணமலையில் பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கான நீச்சல் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போட்டி 01.08.2023 நடைபெற்றுள்ளது.

TRINCOAID ஏற்பாட்டில் யானா நீச்சல் பாடசாலையில் பயிற்சி பெறும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாரான மாணவர்களுக்கு இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை வைத்தியசாலையை அண்மித்த கடற்பகுதியிலிருந்து கோனேஸ்வரர் ஆலயம் அருகாமையின் ஊடாக முத்துமாரியம்மன் கோயில் கடற்கரைக்கு மாணவர்கள் நீந்தி சென்றுள்ளனர்.

பதினாறு வயதுக்கு கீழ்பட்ட 13 சிறார்கள் இந்த நீச்சல் போட்டியில் பங்குபற்றியதுடன் 13 கிலோமீட்டர் தூரத்தை 5 மணித்தியாலங்களில் நீந்தியுள்ளனர்.

காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த நீச்சல் போட்டியில் ஆறு சிறார்கள் 13 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி சாதனை படைத்ததும், சிம்மர் என்ற சிறுவன் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...