இலங்கை

சந்தையில் பழுதடைந்த முட்டைகள் விற்பனை

Published

on

சந்தையில் பழுதடைந்த முட்டைகள் விற்பனை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அழுகும் முன் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் காலாவதி திகதியை அழித்து சந்தைக்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அழுகும் முன் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் காலாவதி திகதியை அழித்து சந்தையில் வெளியிடப்படுவதாகவும், அவை ஏற்கனவே அழுகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி சந்தையில் அதிக விலை கொடுத்து பேக்கரி உரிமையாளர்கள் செய்வதாகவும் இந்திய முட்டைகள் மூலம் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

1 Comment

  1. Pingback: செயற்கை முட்டை விற்பனை: மக்களிடம் வேண்டுகோள் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version