கிராமப் புற மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
கிராமப் புறங்களில் 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
கிராமப் புறங்களில் இவ்வாறு அமைக்கப்படும் 25 ஆயிரம் விடுகளிலும் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டத்தை ஆரம்பிக்க எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.