இலங்கை
மகிந்தவுக்காக கண்ணீர் விட்ட மக்கள்! உடையும் மொட்டு


மகிந்தவுக்காக கண்ணீர் விட்ட மக்கள்! உடையும் மொட்டு
30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கினார். 2015இல் அவர் தோற்று வீட்டுக்குச் சென்றபோது பெரும்பான்மையான மக்கள் சோகத்தில் இருந்தனர். கண்களில் கண்ணீர் வந்தது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் தொம்பே பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மொட்டு இலங்கை சுதந்திரக் கட்சியின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான பிளவுடன் ஆரம்பிக்கப்பட்டது. கட்சி தொடங்கும் போது, புதிய கட்சிகள் அமைத்தால், வீதிகளில் ஊர்வலம் நடத்துவோம் என, சில தலைவர்கள் கூறினர். அதைச் சொல்லி, பல சவால்களுக்கு மத்தியில் வீதிகளில் நடந்து, மக்களை திரட்டி இந்த கட்சியை உருவாக்கினோம்.
30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கினார். 2015இல் அவர் தோற்று வீட்டுக்குச் சென்றபோது பெரும்பான்மையான மக்கள் சோகத்தில் இருந்தனர். கண்களில் கண்ணீர் வந்தது.
அந்த மக்கள் மத்தியில் செல்ல எங்களுக்கு ஒரு கட்சி தேவைப்பட்டது. அதனால் ஊர் மக்களை ஒன்று திரட்டி இந்த கட்சியை உருவாக்கினோம். நாங்கள் உருவாக்கிய இந்தக் கட்சி இன்றும் பலமான கட்சியாக உள்ளது.
மொட்டு மக்களின் கட்சி. இந்த கட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது. கடந்த மே மாதம் 09ஆம் திகதி போராட்டம் என்ற பெயரில் மொட்டுக் கட்சியின் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
அதே தினம் கம்பஹாவில் அதிகளவு சேதம் ஏற்பட்டது. எனது தொகுதியில் 13 வீடுகள் எரிக்கப்பட்டன. இது திட்டமிட்ட வகையில் செய்யப்பட்ட ஒன்று.
இதன் பின்னணியில் ஜே.வி.பி. இருக்கிறது. ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வர முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். எனவே, அவர்கள் மொட்டை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அடித்தாலும், வீடுகளுக்குத் தீ வைத்தாலும் நாங்கள் பின்னோக்கிப் போக மாட்டோம் என்பதை அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் என குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login