தென்னிலங்கையில் ஆயுதக் களஞ்சியம் முற்றுகை

ஆயுதக் களஞ்சியம்

ஆயுதக் களஞ்சியம்

தென்னிலங்கையில் ஆயுதக் களஞ்சியம் முற்றுகை

தென்னிலங்கையில் ஆயுதக் களஞ்சியம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, திஹாகொட – பண்டாரத்தவெல்ல பிரதேசத்திலேயே குறித்த ஆயுதக் களஞ்சியம் சிக்கியுள்ளது.

மாத்தறை குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இது தொடர்பில் மாத்தறை குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மாத்தறை பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version