தனியார் பேருந்தால் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார்கள்
கொழும்பு புறநகர் பகுதியில் பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாக விபத்துச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (24.07.2023) நாவின்ன மற்றும் விஜேராமய பிரதேசங்களுக்கு இடையிலான ஹைலெவல் வீதியில் இடம்பெற்றுள்ளது.
வீதியின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது சாலையில் பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியுள்ளது.
இதன்போது பேருந்தினால் மோதுண்ட கார் முன்னாள் இருந்த மற்றொரு காருடன் மோதியதில் இரு கார்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment