tamilni 349 scaled
இலங்கைசெய்திகள்

யாழ். இளைஞர் உட்பட 3 தமிழர்கள் நீர்கொழும்பு கடலில் மூழ்கி மரணம்

Share

யாழ். இளைஞர் உட்பட 3 தமிழர்கள் நீர்கொழும்பு கடலில் மூழ்கி மரணம்

நீர்கொழும்பு கடலில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தைச் சேர்ந்த ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஸ்மன் (வயது 23), கொஸ்லாந்தையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந்த் (வயது 21), டயகமவைச் சேர்ந்த வடிவேல் ஆனந்தகுமார் (வயது 23) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல்(23.07.2023) ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், கடலில் நீராடிய நிலையில் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுடன் நீராடச் சென்ற மற்றோர் இளைஞர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் உயிரிழந்த நிலையில் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...