ஈழத்தமிழர் விடயத்தில் மோடியின் முடிவு இதுவே: வியூகம் அமைக்கும் ரணில்
13 ஆம் திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தந்திரோபாயமாக இந்தியா விஜயத்தின் போது குறிப்பிட்டுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13 ஆம் திருத்த சட்டம் என்பது தழிழீழ விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஒன்று எனவும் தமிழ் மக்களின் கோரிக்கைகளான சுயாட்சி அல்லது சமஷ்டி முறையை இந்தியா பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது முக்கியமாக இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார ரீதியான இணக்கப்பாடுகள் தொடர்பிலேயே ஆராயப்பட்டுள்ளதாக அ.சர்வேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment