களுத்துறை காட்டுப்பகுதியில் பல மாணவிகள் பாலியல் வன்புணர்வு! நீதிமன்றம் உத்தரவு
களுத்துறையில்16 பாடசாலை மாணவிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் தலா இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமலி ஹல்பண்தெனிய உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு சுபாசாதக மாவத்தையைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியரொருவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பிணை நிபந்தனைகளுக்கு மேலதிகமாக, சந்தேகநபர் வெளிநாடு செல்வதை தடை செய்து குடிவரவு குடியகழ்வுக்கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பித்த நீதவான் மேலும், சந்தேகநபரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 12 மணிக்குள் களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் பாடசாலை மாணவிகளை வகுப்பறையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்ததுடன், மாணவிகளை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவித்து களுத்துறை லாகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு தனது காரில் அழைத்துச்சென்று காரில் வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருந்தமை விசாரணையில் தெரியவந்திருந்தது.
மேலும், சூம் தொழில்நுட்பம் மூலம் மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்த இணைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் இல்லாத நேரத்தில் ஆடைகளை அகற்றுமாறு அச்சுறுத்தி, அவற்றை தனது கைத்தொலைபேசியிலும் அவர் பதிவு செய்திருந்தார்.
இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் தனது மடிக்கணினியில் அனைத்து காணொளிகளையும் சேமித்து வைத்திருந்ததை அவரது மனைவி கண்டுபிடித்து, மாணவிகளின் பெற்றோருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
- breaking news sri lanka
- cricket sri lanka
- Featured
- Kalutara
- lk
- lka
- local news of sri lanka
- news from sri lanka
- sri lanka
- Sri Lanka Kalutara School Student Abuse
- sri lanka latest news
- Sri Lanka Magistrate Court
- sri lanka news
- sri lanka news live
- sri lanka news tamil
- sri lanka news today
- sri lanka news today tamil
- Sri Lanka Police Investigation
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news live
- sri lanka tamil news today
- sri lanka tamil news today 2023
- sri lanka trending
- sri lankan news
- Srilanka Tamil News
- tamil lanka news
- Tamil news
- tamil sri lanka news
Leave a comment