ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
அரசாங்கத்தின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானதெனவும், யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் அந்த துறைகளை விட்டு வெளியேறுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கலுக்கான காலக்கெடுவை வழங்கிய ஜனாதிபதி, அது நடைமுறைப்படுத்தப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குறைபாடுகள் இருப்பின் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பெறப்பட்ட வருவாய் ஈட்டும் முறையை அரசாங்கம் மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கமரூனின் கீழ் இந்த விடயத்தில் பணியாற்றிய அமைச்சர் Francis Maude, இத்துறையில் சீர்திருத்தங்கள் தொடர்பான யோசனைகளைப் பெற இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலகில் காணப்படும் புதிய போக்குகளை அவதானித்து தேவையான அமைப்பை அரசாங்கம் தயார் செய்ய வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக கணக்காய்வு சட்டத்தில் புதிய சட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
Leave a comment