ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
அரசியல்இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Share

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

உள்நாட்டு விமானிகள் நாட்டை விட்டு வெளியேறினால், வெளிநாட்டு விமானிகள் மூலமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் என துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து விமானிகளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விட்டு வெளியேறினாலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மறுசீரமைப்பில் நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு முழு உரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கொவிட் நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைப்பட்டன. இதனால் பல விமானங்கள் தரையிலேயே இருந்தன. ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அந்த விமானிகளை 50% சம்பளத்தில் வைத்துள்ளோம். கொவிட் காலத்தில் தங்கள் விமானங்கள் செல்லாது என்று கூறி குவைத் ஏர்லைன்ஸின் சுமார் 70 விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து புதிய விமானிகள்
விமான சேவையின் மறுசீரமைப்பு மற்றும் விமானிகள் வெளியேறுவது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், 260 விமானிகள் கொண்ட குழு இன்னும் இலங்கையில் தங்கியுள்ளது.

அவர்கள் துபாய் அல்லது சிங்கப்பூர் சென்றால் அவர்களுக்கு பாாியளவான சம்பளம் கிடைக்கும் என எண்ணுகின்றனர். ஆனால் அந்த நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகம். அதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

புதிய விமானிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறோம். ஆனால் சிலர் இந்த நாட்டில் இருக்க விரும்புகிறார்கள்.

ஆனால் அவர்கள் வெளியேறினால் வெளிநாடுகளில் இருந்து புதிய விமானிகள் பணியமர்த்தப்பட்டு விமான சேவை தொடரும் என தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...