இலங்கை
சீனா புறப்பட தயாராகும் ரணில்
சீனா புறப்பட தயாராகும் ரணில்
பாரிய திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த வருடம் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விஜயம் தொடர்பான அரசாங்க தகவல்களின்படி, புதிய முதலீடுகளைத் தேடுவது, வர்த்தக ஒப்பந்தங்களை எட்டுவது மற்றும் தடைப்பட்ட திட்டங்களுக்கான நிதியை மீண்டும் தொடங்குவது என்பன அவரது சீன விஜயத்தின் முக்கிய விடயங்களாக காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு துறைமுக நகரத்திற்கான நிதி முதலீடுகளை விரைவுபடுத்துதல் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை-கடவத்தை-மீரிகம பகுதிக்கான நிதியை மீள ஆரம்பிப்பது குறித்து எக்ஸிம் வங்கியுடனான கலந்துரையாடல் என்பன இந்த விஜயத்தின் போது முன்னெடுக்கப்பட்டவுள்ளன.
ஹம்பாந்தோட்டையில் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட ஒரு எரிபொருள் சுத்திகரிப்புத் திட்டத்தில் சீனா முதலீடு செய்வதும் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதி ரணிலின் விஜயத்திற்கு முன்னதாக, சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் குறித்த தூதுக்குழுவிற்கு அவர் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
மேலும், வருகை தரவுள்ள சீன பிரதிநிதிகள் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம், கொழும்பு துறைமுக நிதி நகரம் முன்மொழியப்பட்ட திட்டங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதியைச் சுற்றியுள்ள முதலீடுகள் மற்றும் சாத்தியமான புதிய திட்டங்களைப் மேற்கொள்வதற்கான மேலதிகமாக மீளாய்வுகளை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login