இலங்கை
இலங்கை போக்குவரத்து துறையில் புதிய நடைமுறை

இலங்கை போக்குவரத்து துறையில் புதிய நடைமுறை
இலங்கையிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் நடத்துனர்கள் இல்லாத பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி கண்டி, கட்டுநாயக்க, மஹரகம தொடக்கம் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, எம்பிலிப்பிட்டிய, மத்தள உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிவேக வீதிகளில் இயக்கப்படும் பஸ்கள் நடத்துனர் இன்றி பயணிக்கும். அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பமாகும் இடத்தில் பயணச்சீட்டுக்களை வழங்குவதற்காக நடத்துனரின் பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்படும்.
அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்ததும், நடத்துனர் டிக்கெட்டுகளையும், பணத்தையும், சாரதியிடம் கொடுத்துவிட்டு பஸ்ஸை விட்டு வெளியேறிவிடுவார்.
பயணச்சீட்டு வழங்காது நடத்துனர்கள் மேற்கொள்ளும் மோசடிகளை தடுப்பதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் முன்னோடி திட்டமாக கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானது. இது மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.
இத்திட்டத்தின் மூலமாகவும் சோதனை நடவடிக்கைகள் காரணமாகவும் பஸ்களின் நாளாந்த வருமானம் ஐந்து லட்சத்து 83 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் பயணச்சீட்டு வழங்கப்படுகின்றனவா என்பது குறித்த சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: தனியாருடன் இணைய முடியாது: வட மாகாண போக்குவரத்து குழு தலைவர் - tamilnaadi.com