இலங்கைசெய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

Share
Untitled 1 39 scaled
Share

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட கனகசபை தேவதாசனை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அமைப்பாளர் முருகையா கோமகன் நேற்று (27.06.2023) திங்கட்கிழமை நேரில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாகச் சிறைப்படுத்தப்பட்டிருந்த கனகசபை தேவதாசன், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்., கரவெட்டி – நெல்லியடியைச் சேர்ந்த 65 வயதுடைய கனகசபை தேவதாசன், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகக் கடமையாற்றி வந்திருந்தபோது கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் மீது தொடரப்பட்டிருந்த இரண்டு வழக்குகளிலும் முறையே ஆயுள் தண்டனை மற்றும் 20 ஆண்டுகால சிறை தண்டனை என கொழும்பு மேல் நீதிமன்றம் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது.

தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தனக்காகத் தானே மன்றில் முன்னிலையாகி வாதாடியிருந்த தேவதாசன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பை ஆட்சேபித்து மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இவ்வாறான நிலையில், அவர் திடீரென தோல் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு இரண்டு தடவைகள் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

சிறைச்சாலை தடுப்பில் இவருக்குப் பொருத்தமான மருத்துவமோ – போசாக்கான உணவுகளோ கிடைப்பதற்கு வழியிருக்கவில்லை.

இவரது துன்பகரமான இந்த நிலையைக் குரலற்றவர்களின் குரல் அமைப்பினராகிய நாம், பல தரப்புகளுக்கும் தெரியப்படுத்தி விடுதலைத் தீர்வுக்கு விரைந்து வழிவகுக்குமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்து வந்திருந்தோம்.

அதற்கமைய பல்வேறு தரப்புக்களினதும் கூட்டு முயற்சியின் பயனாக (23.06.2023) அன்று தேவதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரசின் இந்த மனித நேய செயலாற்றலை வரவேற்கின்ற அதே நேரம், மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரி நிற்கின்றது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தேவதாசனுக்கு மேற்கொள்ள வேண்டிய வைத்திய சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பு, ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நலன்களுக்காகவும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...