இலங்கை
பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு ரணிலின் செய்தி!!
பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு ரணிலின் செய்தி!!
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர வேண்டும் எனவும், இதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர் தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தாது பேசுவதற்கு முன்வர வேண்டும். எந்த வேளையிலும் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகவுள்ளேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நான் தயாராகவே உள்ளேன். தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர். சிலர் முரண்டும் பிடிக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
You must be logged in to post a comment Login