இலங்கை

ஒஸ்மானியா கல்லூரிஆசிரியர்கள்இடமாற்றம் கோரி வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம்!

Published

on

ஒஸ்மானியா கல்லூரிஆசிரியர்கள்இடமாற்றம் கோரி வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம்!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் கோரி வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை(24) பயிற்சி ஆசிரியரொருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் குறித்த பாடசாலையில் மாணவனொருவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் வடக்கு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில்,யா/ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களாகிய நாம் தினம் தினம்
இப்பாடசாலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.

24.05.2023 அன்று யாழ்ப்பாண தேசியக் கல்வியற் கல்லூரியால் பயிற்சிக்காக வந்த ஆசிரியர் மீது தரம் 11 மாணவர்கள்தாக்குதலை ஏற்படுத்தி உள்ளனர் . இது இரண்டாவது சம்பவமாகும். இவ்வாறு தொடர்ந்து ஆசிரியர்கள்
மீது தாக்குதல்கள் இடம்பெறுவதனால் இப் பாடசாலையில் கடமையாற்றுவது அச்சுறுத்தலாகவே உள்ளது.

எனவே எமக்கு வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறுஇடமாற்றம் பெற்றுத் தராவிடின், உடல் ரீதியாக பாதிக்கப்படும் பட்சத்தில் நீங்களே பொறுப்புக்
கூறுபவர்களாக கருதப்படுவீர்கள் – என்றுள்ளது.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version