EgvibQCw07tSnSrDnIXu 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெலிகமவில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு !

Share

வெலிகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிகம – அக்குரஸ்ஸ வீதியில் உள்ள பிட்டதெனிய பகுதியில் இந்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்னால் துரத்திச் சென்ற அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கமல் சமிந்த என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரது சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவருடன் வந்த மகன் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து ஓடிய போது அவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...