யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான யோகராசா கஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார் என தெரிவிக்கப்படுகிற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
#srilankaNews
Leave a comment