இலங்கை
பிளாஸ்டிக் பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து!
பிளாஸ்டிக் பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களினால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதால் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிளாஸ்டிக் பொம்மைகள் சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், பிளாஸ்டிக் பொம்மைகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவதில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் பொம்மைகள் உற்பத்தி மற்றும் விற்பனையை மட்டுப்படுத்துவது தொடர்பாக அந்த அதிகாரசபையில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#srilankaNews
You must be logged in to post a comment Login