LOADING...

வைகாசி 11, 2023

யூரியாவின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் யூரியா உரத்தின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

அத்துடன், விவசாயிகளுக்கு TSP உரம் மற்றும் ஏனைய உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி ஹெக்டேயர் ஒன்றுக்கு 20,000 ரூபா பெறுமதியான வவுச்சரும், இரண்டு ஹெக்டேயருக்கு 40,000 ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

#srilankaNews

Prev Post

வீட்டின் மேற்கூரை மீது விழுந்த விண்கல்!

Next Post

நாட்டில் பரவும் 3 வகையான காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

post-bars

Leave a Comment