வெசாக் காலத்தை முன்னிட்டு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!
எதிர்வரும் வெசாக் வாரத்தில் மதம், ஒழுக்கம் மற்றும் கலாசாரத்திற்கு முரணான செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, போயா தினம் உள்ளிட்ட வெசாக் தினங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஒலுபக்கன் நடனம் போன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெசாக் காலத்திற்கு பொருத்தமற்ற பல்வேறு தகாத செயல்களை செய்ய வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#srilankaNews
Leave a comment