இலங்கையில் நீர் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை ஆலோசித்து வருவதாக சபையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வால், நீர் சுத்திகரிப்புக்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதால், நீர் சுத்திகரிப்பு செலவை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வால், நீர் உற்பத்திக்கான கூடுதல் செலவை சபையினால் இனி தாங்க முடியாது என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்மானிப்பார் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
#srilankaNews
Leave a comment