WhatsApp Image 2023 04 05 at 7.23.08 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தை பொது மேடைகளில் கூட விமர்சிக்க முடியாது!!

Share
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆக கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள்.  தங்களுடைய உரிமைகளை கேட்ட ஒரே காரணத்துக்காக தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் போராடியதற்காக, ஹலோ இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தமது வாழ்வினை இழந்துள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இதை விட பாரதூரமானது.  இதனால் பலர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ள முடியாது தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்ள முடியாது நியாயமான தீர்வு கோரி போராட்டம் செய்ய முடியாது.
பொதுவாக அரசாங்கத்தை பொது மேடைகளில் கூட விமர்சிக்க முடியாது இந்த சட்டத்தின் கீழ்.இவ்வாறு தெரிவித்தார் புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி கா செந்தில்வேல்.
யாழ்ப்பாணத்தில் அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
ஆரம்பத்தில் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலங்கள் 10 ,15 ,20 வருடங்கள், சிறையில் இருந்தவர்கள் கூட தற்பொழுதும் உள்ளனர்.
அவர்களின் விடுதலைக்காக இந்த நாட்டில் உண்மையாக ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைத்து சக்திகளும் கடந்த காலத்தில் போராடி வந்திருக்கின்றோம்.
அந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான் படிப்படியாக காலத்துக்கு காலம் , பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களும் வயதானவர்களும் விடுதலை செய்யப்பட்டு வந்து இன்னும் சிலர் குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இந்த அநியாயம் மோசமான நிலைமை மாறுவதற்கு முன்பே அதே பயங்கரவாத தடை சட்டத்தை போன்ற , இன்னும் அதைவிட ஒரு மோசமான சட்டத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு முன் வந்திருக்கின்றமை தான்  மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதனை எதிர்த்து மக்கள் போராட வேண்டும். மக்கள் அந்த நிலைமைக்கு தற்பொழுது தள்ளப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்திலே எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளனர்.
வெளியில் தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
மாணவர் இயக்கங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
எங்களைப் போன்ற இடதுசாரி கட்சிகளும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வருமாக இருந்தால் , ஏற்கனவே 44 வருடங்கள் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை விட இன்னும் மோசமான சட்டமாக இது வரும்  என்ற அபாயத்தை நாங்கள் தெரிவிக்க விரும்புகின்றோம்.
இந்தச் சட்டம் இவர்கள் இதுவரை முன்மொழிக்கப்பட்ட இந்த சட்டத்தில் இருக்கின்ற விடயங்களை பார்க்கின்ற பொழுது , சாதாரணமாக கூட்டம் கூடினால் கூட , ஒரு கூட்டத்தில் அரசாங்கத்தை எதிர்த்து பேசினால் கூட ,  அது பயங்கரவாதமாக கருதப்பட்டு அதன் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது , தொழிற்சங்கங்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராட முடியாது.  வேலை நிறுத்தங்களை செய்ய முடியாது.  பகீஸ்கரிப்புகளை செய்ய முடியாது.
ஞாயம் கேட்கின்ற தொழிற்சங்கங்கள் மாணவர்களை இந்த தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து அடைக்கக் கூடிய ஒரு அபாயகரமான சூழல் எதிர்காலத்தில் வளரப்போகின்றது.
எனவே தான் இந்த சட்டம் கொண்டுவரக் கூடாது.   பாராளுமன்றத்துக்கு கொண்டு வரக்கூடாது என்ற மக்கள் இயக்கம் , குறிப்பாக நாடு முழுவதும் தென்னிலங்கையில் இருக்கக்கூடிய தொழிற்சங்கங்களும் இடதுசாரி அமைப்புகளும், முற்போக்கு சக்திகளும் , ஜனநாயக சக்திகளும் கையில் எடுத்திருக்கக் கூடிய சூழலை நாங்கள் பார்க்கின்றோம்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...