piasri fernando
இலங்கைசெய்திகள்

முதலாம் தவணை விடுமுறை ஏப்ரலில்!!

Share

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல், 16 ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக, மே மாதம் 13 ஆம் திகதி முதல், மே மாதம் 24 ஆம் திகதிவரை, முதலாம் தவணையின் இரண்டாம்கட்ட விடுமுறை வழங்கப்பட உள்ளது.

மூன்றாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி முதல், 23 ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2023ஆம் கல்வி ஆண்டின், இரண்டாம் தவணை விடுமுறை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல், நவம்பர் மாதம் 12ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி முதல், 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...