கொழும்பு பல்கலைகழகத்துக்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியின் போது பொலிஸார் நடத்திய கண்ணீர்ப்புகை தாக்குதல் சம்பவத்தில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,அரசாங்கம் அரச வன்முறை மற்றும் மிலேசத்தனத்தை பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்கின்றது. கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த நொச்சியாகமவை சேர்ந்த பிரியந்த வன்னிநாயக்க மரணித்துள்ளார்.
அதேபோன்று இதற்கு முன்னர் ஜே.வி.பியின் நிவித்திகலவை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்திருந்தார்.
இதேவேளை ரோயல் கல்லூரியின் பழைய மாணவராக ஜனாதிபதி இருக்கின்றார். அவரின் பாடசாலை மாணவர்களுக்கும் கண்ணீர்புகை தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்றார்.
#SriLankaNews