சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு??

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டை திட்டமிட்டபடி முடிக்க முடியாவிட்டால் சாதாரண தரப் பரீட்சை மீண்டும் பிற்போடப்படும் அபாயம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் மாத்திரமன்றி கல்வி நடவடிக்கைகளில் இருந்தும் விலகி இருப்பதாக உறுப்பினர் புத்திக பத்திரன இங்கு தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version