இலங்கை

அதிக புகை – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

Published

on

அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து தகவல் அளிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் காற்று மாசு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

070 350 0525 என்ற வட்ஸ்எப் எண் இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், அரச வாகனங்கள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் கொழும்பு பஸ்டியன் மாவத்தையில் தனியார் பஸ்களில் புகை பரிசோதனை செய்யப்படுவதாகவும், கடந்த மாத சோதனையில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பஸ்கள் புகை பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

இங்கு தோல்வியடையும் வாகனங்கள் 14 நாட்களுக்குள் வேரஹெர தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாவிட்டால், வருமான அனுமதி பத்திரம் கருப்புப் பட்டியலில் இணைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் காற்று மாசுத் பிரிவின் திட்ட இயக்குநர் ஐ.ஜி. தசுன் ஜனக அவர்களும் கலந்து கொண்டார்.

கடந்த சில வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் புகையை வெளியிடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புகைப் பரிசோதனையில் தோல்வியடையும் வாகனங்களுக்கு முதல் உத்தரவின்படி, வேரஹெர தலைமை அலுவலகத்திற்கு வராவிட்டால் நினைவூட்டல் வழங்கப்படும் என்றும், அதை கடைபிடிக்காவிட்டால், அவர்கள் சாதாரண முறையில் வருமான அனுமதிப் பத்திரம் பெற முடியாத வகையில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version