அரசின் கைக்கூலியாக டக்ளஸ்!!

sanakyan

வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் மோதல்களை முரண்பாடுகளை   தீவிரப்படுத்தும்  வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுகிறார்  என இலங்கை தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன்  குற்றம்சாட்டினார்.

இலங்கை தமிழர்களின் அரசியல் உரிமைக்கு இந்தியா குரல் கொடுப்பதால் மீனவர் பிரச்சினை ஊடாக இரு நாட்டு தமிழர்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம்  முயற்சிக்கிறது.அதன் ஒரு முயற்சியாகவே டக்ளஸ் செயற்படுகின்றார் என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார வாகனச் சட்டத்தின் கீழ் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் கட்டளைகள் மீதான விவாத்தில் உரையாற்றும்  போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிச்சையாக முன்னேற்றமடையும் திறன் கொண்டவர்கள்.அரசின் தவறான தீர்மானங்களினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயம்,கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி கைத்தொழில் ஆகிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெல்லுக்கான உத்தரவாத விலையை 100 ரூபாவாக வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்,ஆனால் வடக்கு மாகாண விவசாயிகளிடமிருந்து 40 முதல் 60 ரூபாக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநரின் முறையற்ற செயற்பாடுகளினால் கிழக்கு மாகாணத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் தமிழர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரை பகுதியில் மாடுகள் வெட்டியும்,சுட்டும் கொல்லப்படுகின்றன.இவற்றை பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு , கிழக்கு மாகாணங்களின் மீன்பிடி கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களுக்கும்,இந்திய மீனவர்களுக்கும் இடையில் மோதல்களை , முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுகின்றார்

.இலங்கை தமிழர்களின் அரசியல் உரிமைக்கு இந்தியா குரல் கொடுப்பதால் மீனவர் பிரச்சினை ஊடாக இரு நாட்டு தமிழர்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது,அதற்கு சார்பாக கடற்றொழில் அமைச்சர் செயற்படுகிறார்.இவ்வாறானவர்களை யாழ்ப்பாண மக்கள் இனிமேல் தேர்தலில் தெரிவு செய்யக்கூடாது என்றார்.

#SriLankaNews

Exit mobile version