அச்சுவேலி பகுதியில் வாள்வெட்டு!!

valvettu 720x450 610x380 1

யாழ்.அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுக் குழு ஒன்று வாள்வெட்டு நடத்தியுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் தொடரச்சியாக முறுகல் நிலை இருந்து வருவதாக அச்சுவேலி பொலிஸார் கூறினர்.

இந்நிலையில் ஒரு குழுவைச் சேர்ந்த இளைஞன் அச்சுவேலி நகருக்கு வந்த நிலையில் மற்றைய குழுவைச் சேர்ந்தவர்கள் அவரைத் துரத்தி துரத்தி வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

சம்பவத்தில் பாரதி வீதி, பத்தமேனியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version