மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம்!

manthirimanai

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் ஒன்று அங்கு ஒட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டுள்ளன. இதனால் அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version