யாழில் போதை முத்திரைகளுடன் ஒருவர் கைது!!!

arrest handdd

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோண்டாவிலைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸாருடன் நெருங்கிய தொடர்பை பேணி வரும் ஒருவரின் உறவினரே இவ்வாறு போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, 4 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே நேற்று மாலை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version