6 இலட்சத்துக்கும் அதிகமானோரின் மின் துண்டிப்பு????

power1

மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது.

அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் இசுறு கஸ்தூரியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version