இலங்கை
தொழிற்சங்க நடவடிக்கையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
புதிய வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் சில இன்று (08) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக கொழும்பு ஹைட் பூங்காவில் பாரிய எதிர்ப்பு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய வரி திருத்தத்திற்கு எதிராக வங்கி ஊழியர்களும் இன்று மதியம் 12.30 மணி முதல் சேவையில் இருந்து விலகத் தயாராகி வருவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, துறைமுக ஊழியர்களும் இன்று சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை துறைமுக சுதந்திர பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்தார்.
இதேவேளை, இன்று சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் அரச நிறைவேற்று அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவின் தலைவர் எச்.ஏ.எல்.உதயசிறி மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login