மஹிந்தவுக்கு மீண்டும் பிரதமர் பதவி!!

mahinda e1655273491290

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

பிரதமர் தினேஷ் குணவர்தனவும் எந்த நேரத்திலும் பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உடன்படவில்லை என்றும், இன்னொரு தரப்பினர், மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version