இன்றைதினம் (03) அதிகாலைக்கு வலுவிழந்து நாட்டின் மேற்கு கரையூடாக வெளியேறும் என்றும் நாட்டில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளிலில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தென்மேல் வங்காள விரிகுடாவை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
#SriLankaNews