சுதந்திர தின ஒத்திகை ஆரம்பம்

image 9ec52724d4

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா ஒத்திகை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

அதற்காக  கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (01) முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை காலை 05 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பு காலிமுகத்திடலை மையமாகக் கொண்டு 20 வீதிகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version