அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகேவுக்கு மேலும் 3 வழக்குகள் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அது தொடர்பான வழக்குகள் இன்று (01) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டிலிருந்து வசந்த முதலிகே, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று விடுவிக்கப்பட்டார்.
#SriLankaNews

