இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் காற்று மாசு முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க காற்று தரக் குறியீட்டுககு அமைய இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் 100 முதல் 150 வீதமாக பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமையானது அடுத்த சில தினங்களுக்கும் தொடர்ந்தும் காணப்படும் எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் வரை இந்த நிலைமையானது குறைவாக அல்லது அதிகமான நிலையில் நீடிக்கலாம் எனவும் காற்று மாசு முகாமைத்துவப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
#SriLankaNews