பாராளுமன்றத்தை வீடியோ எடுத்த யாழ் இளைஞர் கைது

parliment 750x375 1

பாராளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் எடுத்த இருவர் பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்  என்றும் மற்றையவர் முஸ்லிம் இளைஞர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும்  பாராளுமன்ற மைதானத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியின் ஊடாக தியவன்னா ஓயா பகுதிக்கு  வந்து, அங்கிருந்த மரங்களுக்கு மத்தியில் இருந்து பாராளுமன்ற கட்டிடத்தொகுதியை வீடியோ எடுத்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தலங்கம பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version