மின்வெட்டை தொடர்ந்தும் அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு நேற்று (27) இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தினசரி மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை அங்கீகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மீண்டும் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews