இந்தியா

வலுவடையும் தாழமுக்கம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published

on

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மறு அறிவித்தல் வரை மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பரப்பில் தற்போது மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்களை விரைவில் கரைக்கு அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு பயணிக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மன்னார் முதல் காங்கேசன்துறை வரை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தெற்கு அந்தமான் தீவு கடற்பகுதி மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கமானது இன்று(06) தாழமுக்கமாக வலுவடைவதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி எதிர்வரும் 08 ஆம் திகதி தமிழகக் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version