நெல் ஆலைகளுக்கான பதிவு விரைவில்!

gover

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நெல் ஆலை உரிமையாளர்களுக்கான பதிவுத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வேலைத்திட்டத்தை பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்குமாறு அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

​முறையான முறையில் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய ஆலை உரிமையாளர்களின் பதிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அதற்கான பதிவு நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version