பிரதான நகரங்களில் டிஜிட்டல் நாணயம் அறிமுகம்!

ezgif 3 31fbbb2ba9

இந்தியாவில் தற்போது நாணயங்கள் மற்றும் காகித வடிவத்தில் பணம் புழக்கத்தில் உள்ளது. மாறி வரும் நவீன யுகத்தில் கிரிப்டோ கரன்சியின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்து வருகிறது.

மெய்நிகர் நாணயம் என்று அழைக்கப்படும் இந்த கிரிப்டோகரன்சி இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திகழ்கிறது. நைஜீரியா, ஜமைக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் ஏற்கனவே டிஜிட்டல் கரன்சி புழக்கத்தில் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இதனை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023ம் ஆண்டு பட்ஜெட்டின்போது ரிசர்வ் வங்கி ஆதரவுடன் இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தபடும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி சில்லறை வர்த்தகத்தில் சோதனை அடிப்படையில் டெல்லி, மும்பை, பெங்களூர், புவனேசுவர் ஆகிய 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபா இன்று வெளியானது. முதல் கட்டமாக ஸ்டேட் பாங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. ஆகிய 4 வங்கிகள் இந்த டிஜிட்டல் ரூபாயை வெளியிட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக பரோடா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி. மற்றும் கோட்டக் மகேந்திரா ஆகிய வங்கிகள் டிஜிட்டல் ரூபாயை வெளியிட உள்ளன.

#India

Exit mobile version