நாடளாவிய ரீதியில் பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் அமுல்படுத்தப்டும் மின்வெட்டு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை தொடரும் என, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, புதன்கிழமை (30) தெரிவித்தார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆம் அலகு, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி திட்டமிட்டபடி தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பின்னர், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் இரவு நேர மின்வெட்டு 1 மணித்தியாலமாக குறைக்கப்படும் என்றார்.
மேலும், சுற்றுலா அமைச்சினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும் அதன்பின்னர், இரவு நேர மின்வெட்டுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, தென் மாகாணம் மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசெம்பர் 1ஆம் திகதி முதல் இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews